Home Uncategorizedபோதைப்பொருள் புழக்கத்தில் தமிழகம் முதலிடம்: திமுக அரசை விமர்சித்த ஹெச்.ராஜா

போதைப்பொருள் புழக்கத்தில் தமிழகம் முதலிடம்: திமுக அரசை விமர்சித்த ஹெச்.ராஜா

by bait
0 comments

திருவெறும்பூரில் ஹெச்.ராஜா அளித்த பேட்டியில், திமுக ஆட்சியில் தமிழகம் போதைப்பொருள் புழக்கத்தில் முதலிடத்தில் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா, திருவெறும்பூரில் நடந்த நெருக்கடி நிலை 50ஆம் ஆண்டி நிறைவு கருத்தரங்கில் கலந்துகொண்டார். அப்போது, திமுக அரசு போதைப் பொருள் புழக்கத்தில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்துள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும், திமுக ஆட்சி தொடர்ந்தால் அடுத்த தலைமுறையினரை போதைக்கு அடிமையாக்கி அழித்துவிடும் என்றும் கூறினார்.


போதைபொருள்கடத்தல்!

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள குற்றவாளிகள் வெளியில் உள்ளனர். சினிமா உலகமே போதைப்பொருளில் சிக்கியுள்ளது. அந்த உலகம் ஸ்டாலின் குடும்பத்தின் கையில் உள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் திமுக மாவட்ட இணை செயலாளராக இருந்த ஜாபர் சாதிக் 2300 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழகத்தில் போலீசார் கஞ்சா வழக்கு போடுகின்றனர். ஆனால் இதுவரை ஒரு கிராம் கூட சிந்தடிக் ட்ரக் பயன்படுத்தியதாக வழக்கு போடவில்லை. இந்திய அளவில் அதிக போதைப்பொருள் பயன்படுத்தும் மாநிலம் பஞ்சாப். தற்போது தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

banner

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment