Home Uncategorizedபொள்ளாச்சியில் மது போதையில் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ஜாலி பயணம்.. எதிரே காத்திருந்த எமன்

பொள்ளாச்சியில் மது போதையில் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ஜாலி பயணம்.. எதிரே காத்திருந்த எமன்

by bait
0 comments

 கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ராஜா மில் ரோடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் மற்றும் சூலேஸ்வரன் பட்டியைச் சேர்ந்த பாரத் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இளைஞர்கள் இருவரும் மது போதையில் ராயல் என்ஃபீல்டு வாகனத்தை அதிவேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த டிராக்டர் இருவருக்கும் எமனாக மாறி உள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து காரணமாக இன்று இருவருமே உயிருடன் இல்லை.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், அவர்களால் நிதானமாக இருக்க முடியாது. ஆனால் அதை உணராமல் பலர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தொடர்கதையாக உள்ளது. ஒவ்வொரு டாஸ்மாக் வாசலிலும், ஒவ்வொரு தனியார் மதுக்கடைகளிலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி செல்வதை சர்வ சாதாரணமாக பார்க்க முடியும்.
What happened to the youth who drove a Royal Enfield while intoxicated in Pollachi

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது இதில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியவர்கள் நிதானம் இழந்து யார் மீது வேண்டுமானாலும் மோதலாம் என்ற அபாயம் இருக்கிறது. சில இருசக்கர வாகன ஓட்டிகள், பெரிய வாகனங்களில் மோதி உயிரிழக்கவும் வாய்ப்பு அதிகம். இப்படியான விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பொள்ளாச்சியிலும் அப்படியான ஒரு விபத்து தான் நடந்துள்ளது. பொள்ளாச்சி இளைஞர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ராஜா மில் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம் (30). கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சூலேஸ்வரன்பட்டியைச் சேர்ந்தவர் பாரத் (33). இவர்கள் இருவரும் வடக்கி பாளையத்திலிருந்து புரவிபாளையம் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியில் பக்கோதி பாளையத்தை சேர்ந்த விவேகானந்தர் (43) என்பவர் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார்.

ராயல் என்ஃபீல்டு இந்நிலையில் இளைஞர்கள் சதாசிவம் மற்றும் பரத் ஆகியோர் மது போதையில் ராயல் என்ஃபீல்டு வாகனத்தை அதிவேகமாக இயக்கிச் சென்று டிராக்டர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ராயல் என்ஃபீல்டு வாகனத்தில் பயணித்த சதாசிவம் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பாரத் மீட்கப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பொள்ளாச்சி வடக்கிபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் : ONEINDIA

banner

You may also like

Leave a Comment