தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படும் நிலையில் தினமும் சராசரியாக ரூ.150 கோடி அளவிற்கு மதுவிற்பனை நடைபெறுவது வழக்கம். பண்டிகை காலங்களிலும் தொடர் விடுமுறை வரும் நேரங்களிலும் மது விற்பனை அதிகரிக்கும். இந்நிலையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜன.13ம் தேதி முதல் 16ம் தேதி வரை (ஜன.15ம் திருவள்ளுவர் தினம் தவிர்த்து) 3 நாட்களில் ரூ.725.56 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.