Home Uncategorizedபீர் பாட்டிலால் பஸ் கண்ணாடியை உடைத்த சிறுவர்கள்! மது போதையில் சாலையில் அமர்ந்து அட்டகாசம்!

பீர் பாட்டிலால் பஸ் கண்ணாடியை உடைத்த சிறுவர்கள்! மது போதையில் சாலையில் அமர்ந்து அட்டகாசம்!

by bait
0 comments

கள்ளக்குறிச்சி அருகே மது போதையில் பீர் பாட்டிலால் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் நள்ளிரவில் மதுபோதையில் இருந்த நான்கு சிறுவர்கள், சாலையில் அமர்ந்து அலப்பறையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அந்த வழியாக சென்னை நோக்கிச் சென்ற அரசு பேருந்தை கைகாட்டி நிறுத்த முயன்றனர். அப்போது அரசு பேருந்து நிறுத்தாததால் மது போதையில் இருந்த சிறுவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடியின் மீது வீசி உள்ளனர்.

இதில் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளான நான்கு சிறுவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவர்கள் சாலையில் அமர்ந்து அலப்பறை செய்யும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறத.

banner

தகவல் : PUTHIYATHALAIMURAI

You may also like

Leave a Comment