கள்ளச்சாராய உயிரிழப்பு; பிகாரில் பரிதாபம்

பன்னிரண்டு பதிமூன்று வயதுச் சிறுமி ஒருவர், கையில் வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் மஷ்ரக் அரசு பள்ளிக்கு வெளியே கூடியிருந்த கூட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.தனது தந்தை ஹரேந்திர ராம் கள்ள சாராயம் குடித்து இறந்துவிட்டார் என்றும் இறப்புச் சான்றிதழை வழங்குவதற்காக இறந்தவரின் அடையாள அட்டையுடன் சமூக சுகாதார நல மையத்திற்கு தான் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சிறுமி கூறினாள். அருகில் அந்த சிறுமியின் சகோதரி, தன் ஆறு வயது சகோதரனை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாள். இந்த சிறு குழந்தைதான் தன் தந்தையின் இறுதி சடங்குகளை செய்துள்ளது.
இந்தக்குழந்தை இறுதிச்சடங்கை செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட்டதை தடுத்திருக்க வழியில்லையா? இந்த கேள்வி என் மனதில் எழுந்தது. இறந்த ஹரேந்திர ராமின் சகோதரரின் உடல்நிலை சில நாட்களாக சரியில்லாமல் இருந்ததால் அவரால் இறுதி சடங்குகளை செய்ய முடியவில்லை என்று அப்போதுதான் தெரியவந்தது.”அவர்தான் வீட்டில் ஊதியம் ஈட்டும் ஒரே நபர். நாங்கள் நான்கு பேர் அவரை நம்பித்தான் இருந்தோம். கூலி வேலை செய்து வாழ்க்கை ஓடியது. இப்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை. சாராயம் குடித்து இறந்துவிட்டார். சாராயம் எங்கிருந்து வந்தது. அதை தெரிந்துகொள்ளும் வாய்ப்புக் கூட கிடைக்கவில்லை,” என்று ஹரேந்திர ராமின் மனைவி, பிபிசியிடம் கூறினார்.இந்த வீட்டை சுற்றி நான்கு பேர் இறந்துள்ளனர்.

பிகார் மாநிலம் ஸாரண் மாவட்டத்தில் உள்ள சப்ராவில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இதில் சப்ராவில் 27 பேரும், பாட்னாவில் 2 பேரும் உயிரிழந்தனர்.
சப்ராவில் நடந்த இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது மிகவும் ஏழ்மையானவர்கள்.இந்த மாநிலத்தில்தான் கடந்த 6 ஆண்டுகளாக மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும் கள்ள சாராயம் குடித்து ஏற்படும் இறப்புகள் இங்கு புதிதல்ல. ஸாரணின் மஷ்ரக் பகுதியில் கள்ளச்சாராயம் காரணமான இத்தனை மரணங்கள் முதன்முறையாக நிகழ்ந்துள்ளன.இங்கு சள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களில் பெரும்பாலானோர் மஷ்ரக் நகர் பஞ்சாயத்தில் வசிப்பவர்கள்.இதேபோல, தஞ்சாவூர் பூமான் ராவுத்தன் கோயில் தெருவைச் சேர்ந்த குட்டி விவேக் என்பவரும் அதே பாரில் சென்று மது அருந்திவிட்டு வெளியில் வந்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அவரும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.ஏற்கெனவே விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் கள்ளச்சாரயம் அருந்தியதால் 22 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டாஸ்மாக் பாரில் மது வாங்கி அருந்தி இருவர் இறந்துபோனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவல் : BBC
