Home Uncategorizedபள்ளி மாணவ, மாணவியரின் போதை பொருள் ஒழிப்பு பேரணி !

பள்ளி மாணவ, மாணவியரின் போதை பொருள் ஒழிப்பு பேரணி !

by bait
0 comments

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பள்ளி மாணவ, மாணவியரின் போதை பொருள் ஒழிப்பு பேரணி. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள செங்கப்படை ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி சார்பில் கமுதியில் போதைப்பொருள் ஒழிப்பு பேரணி நடைபெற்றது.பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அன்னம்மாள் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.பேரணியில் போதை அரக்கன் வேடமிட்ட மாணவன் முன் செல்ல மாணவர்களின் தாரை தப்பட்டையோடு கமுதி முழுவதும் பேரணி வலம் வந்தது.பேரணியில் போதையினால் ஏற்படும் விளைவுகள் குறித்த மாணவ, மாணவியரின் கோஷங்கள் விண்ணை பிளந்தன.போதையினால் உண்டாகும் இழப்பு குறித்த பதாகைகளும், துண்டு பிரசுரமும் வழங்க பட்டது.

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment