Home Uncategorizedபண்ருட்டியில் 6 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது, 1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

பண்ருட்டியில் 6 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது, 1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

by bait
0 comments

வாகன சோதனையின் போது பண்ருட்டியில் 6 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது, 1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை தடுக்க போலீசார் மற்றும் போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் பண்ருட்டி சென்னைசாலையில்,அதிவேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும் போதுஇரண்டு வாலிபர்கள் சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு 6.கிலோ அளவில் கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது,உடனே போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் தஞ்சாவூர் மாவட்டம் திருவடி மருதூர் பகுதி சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சதாம் உசேன்(26)கொத்தனார் அருண்குமார்(24) என்று தெரிய வந்தது இவர்கள் செல்போன் மூலமாக கஞ்சா கொண்டுவரப்பட்டு தஞ்சாவூர் பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தன,மேலும் இவர்கள் மீது ஏற்கனவே குற்ற சம்பவங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது,அதனை அடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்,

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment