தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிரமேல்குடி கிராமத்தில் டாஸ்மாக் அரசு மதுபான கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ரெத்தினசபாபதி என்பவர் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்து கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
ஆனால் இப்போது சட்டவிரோதமாக ஆங்காங்கே மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இவ்வாறு சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்க வேண்டாம் என்று பலமுறை சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதுபற்றி கலெக்டர், டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகளுக்கும் ரெத்தினசபாபதி தலைமையில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
எனவே டிஎஸ்பி துரித நடவடிக்கை எடுத்து சிரமேல்குடி கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

தகவல் : GETLOKALAPP
