Home Uncategorizedநெல்லை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. கஞ்சா கைதியை தப்ப வைக்க சதியா? அதிர்ச்சி சம்பவதின் பின்னணி என்ன?

நெல்லை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. கஞ்சா கைதியை தப்ப வைக்க சதியா? அதிர்ச்சி சம்பவதின் பின்னணி என்ன?

by bait
0 comments

நெல்லை தச்சநல்லூர் காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பல், அடுத்தடுத்து 3 இடங்களில் மொத்தமாக 4 பெட்ரோல் குண்டுகளை வீசி அலற விட்டுள்ளனர். கஞ்சா வழக்கில் கைதான சகோதரரை காவல்நிலையத்தில் இருந்து தப்பிக்க வைக்க போட்ட சதி திட்டத்தின் பின்னணி என்ன?

நெல்லை மாநகரின் முக்கிய காவல் நிலையங்களில் ஒன்றான தச்சநல்லூர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்கம் போல தங்களது பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாலை நேரம்.. யாரும் எதிர்பாராத போது… காவல்நிலையத்தின் வெளியே பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. என்ன நடந்தது என யோசிப்பதற்குள் அடுத்த சத்தம்! உடனே வெளியே ஓடி வந்து பார்த்த போலீசார்.. ஷாக் ஆகினர்.

காவல்நிலைய முன்பக்க காம்பவுண்ட் சுவரில்…. தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதன் அருகே பாட்டில் கண்ணாடிகள் சிதறி கிடக்க, பெட்ரோல் வாடையும் வீசியுள்ளது. அதை வைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். உடனே சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ய.. அதில் பல்சர் மற்றும் ஹோண்டா பைக்குகளில் வந்த ஐந்து இளைஞர்கள், அடுத்தடுத்து இரு பெட்ரோல் குண்டுகளை, காவல்நிலையத்தில் வீசி சென்றது தெளிவாக பதிவாகி இருந்தது.

அதை தொடர்ந்து மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, அனைத்து சோதனை சாவடிகளையும் உஷார் படுத்தினர். சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களை, அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து அவர்களைப் பிடிக்க களத்தில் இறங்கினர். அப்போதுதான் திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரையிருப்பு சோதனை சாவடியை… அதே கும்பல் பைக்கில் கடந்துள்ளனர்.

banner

தகவல் : NEWS18TAMIL

You may also like

Leave a Comment