புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மங்களநாட்டை சேர்ந்தவர் மங்கையர்கரசி (60). இவர் மங்களநாட்டிலுள்ள தனது வீட்டின் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நாகுடி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.