Home Uncategorizedதிருவண்ணாமலையில் குழந்தைகளுடன் கவுரி.. அதிகாலையில் கோபித்துக் கொண்டு வெளியேறி.. இப்படியா நடக்கனும்

திருவண்ணாமலையில் குழந்தைகளுடன் கவுரி.. அதிகாலையில் கோபித்துக் கொண்டு வெளியேறி.. இப்படியா நடக்கனும்

by bait
0 comments

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் என்பவருடைய மனைவி கவுரி, செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு இரண்டு 2 மகன்கள் இருந்தனர். இந்நிலையில் வெங்கடேசன் மதுகுடிக்கும் பழக்கம் உள்ளவர் என்று கூறப்படுகிறது. இதனால் தினமும் குடித்துவிட்டு மதுபோதையில் வந்தாராம். இதனால் கோபித்துக் கொண்டு அதிகாலையில் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய கவுரி எடுத்த முடிவு ஆடிப்போக வைத்துள்ளது

குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு மட்டுமல்ல.. குடும்பத்திற்கே கேடாக இருக்கிறது. ஒரு தனி மனிதனின் குடிப்பழக்கம், அவரை நம்பியுள்ள மனைவி, குழந்தைகளையும் மோசமாக பாதிக்கிறது. ஏனெனில் குடிப்பழக்கம் உள்ளவர்களில் பலர், தினமும் குடிப்பதால் நடுத்தர வயது வரும்போது, உடல் நிலை மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். சிலர் பிள்ளைகளை காப்பாற்றி கரைசேர்க்க வேண்டிய வயதில் இறந்து போகிறார்கள்..

இது ஒருபுறம் எனில், குடிப்பழக்கத்தால், தினமும் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைகளை அனுபவிக்கும் மனைவி, தவறான முடிவெடுக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. குடிப்பழக்கத்தை கைவிட வைக்க முடியாததால் கணவனை விட்டு பிரிந்து செல்வது நடக்கிறது. ஆனால் சிலர் மிக முட்டாள் தனமாக தன்னையே அழித்துக் கொள்கிறார்கள். அத்துடன் குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் இறந்து போகிறார்கள். இப்படிப்பட்ட முட்டாள்தனங்களை ஒருபோதும் செய்யவே கூடாது. எந்த நிலையிலும் வாழ்க்கையை முடித்துக் கொள்ளவே கூடாது.. அப்படி ஒரு மன நிலை வந்தால் மருத்துவர்களை அணுகலாம். திருவண்ணாமலை அருகே நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

திருவண்ணாமலை கூலி தொழிலாளி குடும்பம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவுரிக்கு 35 வயது ஆகிறது. இவரும் கூலித்தொழிலாளி ஆவார். கவுரி சென்னசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு கிஷோர் (5), தேவேஷ் (4) என்ற 2 மகன்கள் இருந்தனர்.

banner

மது பழக்கம் கூலி வேலை செய்து வரும் வெங்கடேசன் மதுகுடிக்கும் பழக்கம் உள்ளவர் என்று கூறப்படுகிறது. இதனால் தினமும் குடித்துவிட்டு மது போதையில் அவர் வீட்டிற்கு வருவாராம். கணவர் மது அருந்துவதை கவுரி கண்டிப்பாராம். இந்த விவகாரத்தில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு கவுரி மற்றும் அவரது இரண்டு மகன்கள் உள்பட 3 பேரின் உடல்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் : ONEINDIA

You may also like

Leave a Comment