திருப்பூர் வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையம் பகுதியில் 15 வேலம்பாளையம் போலீசார் நேற்று (ஜூலை 25) ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் நீரோஜ் பாகர் (வயது 25), ஹமித் குமார் (28), சாஹித் சத்திரிய்யா (33) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல் : GETLOKALAPP