Home Uncategorizedதிருப்பூரில் அதிக அளவு புழக்கத்தில் இருக்கும் கஞ்சா; இருவரை அதிரடியாக கைது செய்த போலீசார்!

திருப்பூரில் அதிக அளவு புழக்கத்தில் இருக்கும் கஞ்சா; இருவரை அதிரடியாக கைது செய்த போலீசார்!

by bait
0 comments

திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் விற்பனையாவதாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதனை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் காந்திநகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்று வந்தவர்களை கைது செய்துள்ளனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா


திருப்பூர் மாவட்டத்தில் தற்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் அதிகப்படியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இது போன்ற புகார் தொடர்ந்து வந்துகொண்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு உத்தரவு பிறபித்தார். அந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

காந்திநகர்பகுதியில்போலீசார்ஆய்வு

banner

அந்த தகவலின் பேரில் காந்தி நகர் பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அந்த சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டகஞ்சாவை கருப்பையா மற்றும் தணிகை வேலன் ஆகிய இருவரும் சேர்ந்து விற்பனை செய்வதும் தெரியவந்தது.4.500

கிலோ கஞ்சா பறிமுதல்

அதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து 4.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அனுப்பர்பாளையம் போலீசார் தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்து வருபவரை கண்காணித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment