திருச்சி எம்ஜிஆர் சிலை எதிரே உள்ள குமுமிக்கரை பகுதியில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அரசு மருத்துவமனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் சுலேக்சனா தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் மோகன்ராஜ் (வயது 27), ஹரி விஷ்வா (வயது 19) என்பவர்களும், கீழவண்ணாரப்பேட்டைச் சேர்ந்த சதாசிவம் (வயது 20) ஆகிய மூன்று பேர் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 800 கிராம் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
தகவல் : GETLOKALAPP