ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்காட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது சுபாஷினி என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தபோது போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் இருந்து 90 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அறுவக்குடி பிரிவு சாலை அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நெல்சன் மிராண்டா என்பவரையும் போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தகவல் : GETLOKALAPP