Home Uncategorizedதிங்கள்நகரில் மது போதையில் இயக்கிய மினி பஸ் பறிமுதல்

திங்கள்நகரில் மது போதையில் இயக்கிய மினி பஸ் பறிமுதல்

by bait
0 comments

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரில் மினி பேருந்து ஓட்டுநர் கடந்த மாதம் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலியானதையடுத்து, திங்கள் நகர் பேரூந்து நிலையத்திலிருந்து வெள்ளிச்சந்தை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த மினி பேரூந்தை நிறுத்தி ஓட்டுநரை குளச்சல் போக்குவரத்து காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது மினி பேரூந்தை இயக்கிய ஓட்டுநர், கல்லுக்கூட்டத்தைச் சேர்ந்த ஜெபின்( 29)என்பவர் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதை ‘பிரீத் அனலைசர்’ கருவி மூலம் கண்டு பிடிக்கப்பட்டு குடிபோதை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மினி பேரூந்தை பறிமுதல் செய்து குளச்சல் போக்குவரத்து காவல் நிலையம் கொண்டு வரப்பட்டது.

தகவல் : GETLOKALAPP

You may also like

Leave a Comment