பர்கூர் அருகே, மது போதையில் நடனமாட அழைத்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மது போதையில் மாப்பிள்ளையின் நண்பர்கள் நடனமாட அழைத்ததால், திருமணத்தையே மணப்பெண் தடாலடியாக நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காந்திகுப்பம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், பனகமுட்லு கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் காவேரிப்பட்டினம் – சேலம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 27ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முதல் நாள் மாலை அதே மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
தகவல் : NEWS18TAMIL
