Home Uncategorizedதலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

by bait
0 comments

செஞ்சி அருகே கஞ்சா போதையில் அலப்பறை செய்த இளைஞரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து கை கால்களை கட்டி போலீசாரிடம் ஒப்படைத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் பையூரை சேர்ந்த இளைஞர் லோகேஷ். இவர் கஞ்சா போதையில் அப்பகுதியில் அலப்பறையில் ஈடுபட்டு நடந்து செல்பவர்களிடம் வம்பிழுத்து சண்டையிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து கைகால்களை கட்டி போட்டி செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தலைமை காவல் முனியப்பனிடம் கஞ்சா போதையில் இளைஞர் சண்டையிட்டதோடு தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசியுளார். இதனையடுத்து கஞ்சா போதையில் தர்ம அடி வாங்கிய இளைஞரை கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து கைது செய்தனர். 

இந்நிலையில் கஞ்சா போதையில் இளைஞர் அல்பறை செய்து பொதுமக்களிடம் சண்டையிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தகவல் : ABPNEWS

banner

You may also like

Leave a Comment