Home Uncategorizedடாஸ்மாக் தில்லுமுல்லு… கடை நம்பரும் இல்ல, MRP புகாரும் இல்ல- தவிக்கும் மதுபிரியர்கள்!

டாஸ்மாக் தில்லுமுல்லு… கடை நம்பரும் இல்ல, MRP புகாரும் இல்ல- தவிக்கும் மதுபிரியர்கள்!

by bait
0 comments

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்குவோருக்கு புதுவித சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக மதுபானங்கள் தொடர்பாக புகார் அளிக்க முடியாமல் மதுபிரியர்கள் தவிப்பதாக தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் மது விற்பனையை மாநில அரசே நடத்தி வருகிறது. இதற்காக டாஸ்மாக் என்ற தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் மதுபானங்கள் மொத்தமாக மற்றும் சில்லறை வர்த்தகம் செய்கின்றனர். ஒருபுறம் மதுவிலக்கை நோக்கிய பயணத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், டாஸ்மாக் பயன்பாட்டில் பல்வேறு புதிய அம்சங்களும் புகுத்தப்பட்டு வருகின்றன.

டாஸ்மாக் மது விற்பனை

டிஜிட்டல் பில் சிஸ்டம், காலி பாட்டிலை திரும்ப கொடுத்தால் குறிப்பிட்ட தொகை பெறுதல் உள்ளிட்டவை முக்கியமானவை. அதேசமயம் புகார்களும் எழாமல் இல்லை. அந்த வகையில் புதுவிதமான சிக்கல் ஒன்று எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் அடையாள எண் ஒன்று அளிக்கப்பட்டிருக்கும். இதனை அந்த கடையின் போர்டில் தெளிவாக குறிப்பிட்டிருப்பர்.

banner

மதுபான கடை அடையாள எண்

3 அல்லது 4 இலக்க எண்ணாக இருக்கும். இந்நிலையில் சென்னையில் உள்ள சில டாஸ்மாக் கடைகளில் அடையாள எண் இல்லை எனக் கூறப்படுகிறது. அதை லேசாக அழித்துள்ளனர் அல்லது அழிந்துவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையின் எண்ணை கண்டறிவதில் மதுபிரியர்களுக்கு சிக்கல் நிலவுகிறது. இந்த எண் எதற்காக, நேராக பணம் கொடுத்து மதுபானங்கள் வாங்கி கொண்டு செல்ல வேண்டியது தானே? எனக் கேட்கலாம்.

கூடுதல் விலைக்கு விற்பனை

டாஸ்மாக் கடைகளில் MRP விலையை காட்டிலும் கூடுதல் விலை வைத்து விற்பதாக பல்வேறு சமயங்களில் புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர வேறு சில பிரச்சினைகளும் டாஸ்மாக்கில் எழுகின்றன. இதுபற்றி மதுபிரியர்கள் புகார் அளிக்க வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையின் அடையாள எண் அவசியம்.

நோ சொல்லும் கடைக்காரர்கள்

இதுபற்றி கடைக்காரரிடம் கேட்டாலும் டாஸ்மாக் கடையின் அடையாள எண்ணை தர மறுப்பதாக கூறப்படுகிறது. அப்புறம் எப்படி புகார் அளிப்பது? டாஸ்மாக் புகார் எண்ணுக்கு அழைத்து ஏதேனும் குறைகளை தெரிவித்தால், எந்த கடை அதன் எண்ணை தெரிவிக்க வேண்டும் எனக் கேட்கின்றனர். ஆனால் போர்டில் இருக்கும் எண் அழிக்கப்பட்டு விட்டதால் சிக்கல் நிலவுகிறது.

எங்கெல்லாம் சிக்கல்?

இதுபற்றி மதுபிரியர்கள் சிலர் கூறுகையில், வேளச்சேரிக்கு வந்து பாருங்கள். மேலும் சென்னை மண்டலட்திற்கு உட்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இப்படியான சிக்கல் இருப்பதாக கூறுகின்றனர். இதுபற்றி டாஸ்மாக் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment