Home Uncategorizedசேலம் டவுன், செவ்வாய் பேட்டையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

சேலம் டவுன், செவ்வாய் பேட்டையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

by bait
0 comments

சேலம் டவுன் எஸ்ஐ மஞ்சுளா மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தனர். அப்போது ஆர் எஸ் சாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் 1. 600 கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் அன்னதானப்பட்டி மணியனூரை சேர்ந்த சரண் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல் செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் நேற்று மாலை கபிலர் தெரு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அம்பாள் ஏரி ரோட்டை சேர்ந்த கீர்த்திவாசன் என்கின்ற நிர்மல், செட்டிகாட்டைச் சேர்ந்த யுவராஜ் என்கின்ற சடையன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் 1. 150 கிலோ கிராம் கஞ்சா இருந்தது இதனை அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தகவல் : GETLOKALAPP

You may also like

Leave a Comment