Home Uncategorizedசெய்தியாளர் போர்வையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது: மயிலாடுதுறையில் பரபரப்பு

செய்தியாளர் போர்வையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது: மயிலாடுதுறையில் பரபரப்பு

by bait
0 comments

மயிலாடுதுறையில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்; செய்தியாளர் அட்டையுடன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

மயிலாடுதுறை அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினரிடம், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு நபர் தினசரி பத்திரிகை ஒன்றின் அடையாள அட்டையை காட்டி தப்பிக்க முயன்றபோது போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் ரயில் மூலம் கடத்தப்படுவதைத் தடுக்க அனைத்து ரயில்களிலும் தீவிர சோதனை நடத்த ரயில்வே இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் வன்னியபெருமாள் ரயில்வே போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனை அடுத்து, திருச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி அறிவுறுத்தலின்பேரில் மயிலாடுதுறை இருப்பு பாதை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கொள்ளிடம் ரயில் நிலையத்துக்கும், சீர்காழி ரயில் நிலையத்துக்கும் இடையே கச்சிக்குடாவில் இருந்து மதுரை செல்லும் சிறப்பு விரைவு வண்டியில் (வண்டி எண்:07191) இருப்புப்பாதை போலீஸார் மற்றும் போதைப்பொருள் மற்றும் நுண்ணறிவு போலீஸார் இணைந்து தீவிர சோதனை நடத்தினர்.

banner

தகவல் : INDIANEXPRESS

You may also like

Leave a Comment