Home Uncategorizedசென்னை : தனியார் கல்லூரி அருகே போலீசார் நடத்திய கஞ்சா வேட்டை.. 19 மாணவர்கள் சிக்கினர்

சென்னை : தனியார் கல்லூரி அருகே போலீசார் நடத்திய கஞ்சா வேட்டை.. 19 மாணவர்கள் சிக்கினர்

by bait
0 comments

மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் தலைமையில் சுமார் 1000 காவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடுகளில் காவல் துறை நடத்திய கஞ்சா வேட்டையில் போதைப் பொருள் பயன்படுத்திய 19 மாணவர்கள் பிடிபட்டனர்.

பொத்தேரி பகுதியில் பிரபல தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியை சுற்றியுள்ள பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பில் அதிக அளவில் மாணவர்கள் தங்கியுள்ளனர். இப்பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் தலைமையில் சுமார் 1000 காவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனையில், கஞ்சா பொட்டலம், கஞ்சா சாக்லேட், கஞ்சா எண்ணெய், பாங்கு, ஹூக்கா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தகவல் : NEWS18TAMIL

banner

You may also like

Leave a Comment