சென்னையில் கன்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 848 கிலோ கஞ்சாவை மத்திய போதை தடுப்பு போலீஸ் பறிமுதல் செய்தனர்.

ஆந்திரா-ஒடிசா எல்லையில் இருந்து கஞ்சா கடத்தி வந்த ஒரு கும்பலை சென்னை மண்டல போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி) பிடித்தது. சென்னையில் உள்ள சுங்கச்சாவடி அருகே கண்டெய்னர் லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 848 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.அப்போது கண்டெய்னர் லாரியில் 396 கஞ்சா பாக்கெட்டுகள் செங்கற்களில் அடைக்கப்பட்டு, மிளகாய் மூட்டைகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
கஞ்சாவைக் கொண்டு சென்ற மூன்று பேரில், என்சிபி பணியாளர்கள் லாரியை இடைமறித்தபோது இரண்டு பேர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய நிலையில் அப்போதே போலீசார் விரட்டி பிடித்ததாக தெரிவித்தனர்.
தகவல் : INDIANEXPRESS
