Home Uncategorizedசென்னையில் ஓடும் பஸ்சில் தகராறு: கண்டக்டர் பலி.. பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தம்.. பரபரப்பு

சென்னையில் ஓடும் பஸ்சில் தகராறு: கண்டக்டர் பலி.. பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தம்.. பரபரப்பு

by bait
0 comments

 சென்னை: சென்னை அண்ணா ஆர்ச் அருகே மாநகர பேருந்தில் மதுபோதையில் பயணி தகராறில் ஈடுபட்டார். இதில், பேருந்து நடத்தநர் கீழே விழுந்ததில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து பயணி கோவிந்தன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். நடதுத்துநர் உயிரிந்ததையடுத்து மாநகர பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.
 சென்னையில் ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்த பேருந்துகளில் தினமும் லட்சகணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். முக்கியமான வழித்தடங்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதை காண முடிகிறது. மாநகர பேருந்துகளில் அவ்வப்பொது, பேருந்து நடத்துநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்படும் சம்வங்கள் நடைபெறுகின்றன.

ஆனால் சில நேரங்களில் இதுபொன்ற மோதல்கள் கைகலப்பு வரை சென்று விடுகின்றன. அப்போது பயணிகள் சமரசம் செய்து வைப்பதையும் பார்க்க முடியும். இந்த நிலையில் தான் சென்னையில் இன்று மாநகர பேருந்தில் கண்டக்டருக்கும் பயணி ஒருவருக்க்கும் மோதல் ஏற்பட்டு, கண்டக்டர் கீழே விழுந்து பலியான அதிர்ச்சிகர சமப்வம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

சென்னை கோயம்பேடு – எம்.கே.பி நகர் இடையே 46 G என்ற வழித்தட எண் கொண்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து ஒன்று சென்னை அரும்பாக்கம் அருகே உள்ள அண்ணா ஆர்ச் அருகே வந்த போது கண்டக்டர் ஜெகன் குமார் என்பவரிடம் பயணி கோவிந்தன் என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். மதுபோதையில் இருந்த பயணி கோவிந்தன் தகராறில் ஈடுபட்ட போது பேருந்தில் இருந்து கீழே விழுந்த கண்டக்டர் ஜெகன் குமார் உயிரிழந்துள்ளார். நடத்துநர் உயிரிழந்ததால் அமைந்தகரை பகுதியில் அரசு பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயணி கோவிந்ததனை போலீசார் கைது செய்துள்ளனர். கோவிந்தனும் காயம் அடைந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிக்கெட் எடுப்பது தொடர்பாக நடத்துநருக்கும் பயணி கோவிந்தனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக போலீசார் கூறினர். நடதுத்துநர் உயிரிந்ததையடுத்து மாநகர பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர்

தகவல் : ONEINDIA

banner

You may also like

Leave a Comment