காங்கேயம் அருகே சிவன்மலை பகுதியில் வடமாநில தொழிலாளி ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அக்தர் அன்சாரி (28) என்பவர் வீட்டில் குடும்பத்துடன் வசித்துக்கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவனிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.