தேசிய சராசரியான 1.2%க்கு எதிராக தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு 0.1 சதவீதம் ஆக உள்ளது.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் தொடர்பான கைது நடவடிக்கை குறைவாக உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழ்நாட்டில் கஞ்சா சாகுபடி பூஜ்ஜியத்தை எட்டியதாகக் தரவுகளை காட்டும் வகையில் ,சென்னை காவல்துறை இயக்குநர் ஜெனரல் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில், காவல்துறை, வெளியிட்டுள்ள அறிக்கையில், கஞ்சா பயன்பாட்டில் நாட்டிலேயே தமிழ்நாடு 35வது இடத்தில் உள்ளது. தேசிய சராசரியான 1.2%க்கு எதிராக தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு 0.1 சதவீதம் ஆக உள்ளது. அதேபோல் ஓபியாய்டுகளின் பயன்பாடு தேசிய சராசரி 2.06 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் சராசரி 0.26 சதவீதமாக ஆகவும் உள்ளது.
தமிழ்நாட்டில் மயக்க மருந்துகளின் பயன்பாடு 0.3% ஆகும், இது தேசிய சராசரியான 1.08% ஐ விட மிகக் குறைவு. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள் கிடைப்பதைத் தடுக்க, மாநில அளவிலான நர்கோ ஒருங்கிணைப்பு (என்சிஓஆர்டி) குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளை உள்ளடக்கிய, தலைமைச் செயலாளர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டத்தை நடத்துகிறார்.
மாவட்டங்களில் உள்ள நர்கோ ஒருங்கிணைப்பு (என்சிஓஆர்டி) குழு கமிட்டிகளுக்கு கலெக்டர்கள் தலைமை தாங்குகிறார்கள். அவர்கள் பள்ளிகள், கல்லூரிகள், சமூக நலன், சுகாதாரம், உணவு, பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளனர். போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, கல்லூரி விடுதிகள், கல்வி நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள் தங்கும் இடங்கள் ஆகியவற்றின் அருகே உளவுத்துறை அடிப்படையிலான, குறிப்பிட்ட நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல் : INDIANEXPRESS
