Home Uncategorizedகோவையில் பரபரப்பு: மெத்தம்பெட்டமைன் எனும் உயர் ரக போதை பொருள்… கல்லூரி மாணவர்கள் கைது!

கோவையில் பரபரப்பு: மெத்தம்பெட்டமைன் எனும் உயர் ரக போதை பொருள்… கல்லூரி மாணவர்கள் கைது!

by bait
0 comments

மெத்தபெட்டமைன் எனும் உயர்ரக போதை பொருள் வைத்திருந்த 3 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1,80,000 ரூபாய் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை சூலூர், அடுத்த நீலாம்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உயர்ரக போதைப் பொருள்கள் மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கபெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலிசார் நீலாம்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

வசமாக சிக்கிய இளைஞர்கள்

அப்போது சந்தேகத்துக்கு இடமான 2 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை கொண்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களது உடைமைகளை சோதித்தபோது, அதில் சந்தேகத்துக்கிடமான வகையில் வெள்ளை நிற பொட்டலம் ஒன்று இருந்தது. இது குறித்து இளைஞர்களிடம் கேட்டபோது பதில் அளிக்காமல் இருந்தனர்.

காவல்நிலையத்தில் விசாரணை

இதையடுத்து மூவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் இளைஞர்கள் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த நந்தகிருஷ்ணா மற்றும் வருண் என்பதும், நவ இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது.

banner

இதனை கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் மெத்தபெட்டமைன் வாங்க உதவிய முகமது அஷ்ரத் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 60 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட
மெத்தம்பெட்டமைனின்(methamphetamine ) மதிப்பு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என போலிசார் தெரிவித்துள்ளனர். உயர் ரக போதை பொருள் வைத்திருந்ததால் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment