Home Uncategorizedகொரோனா அச்சம்: எரிசாராயம் அருந்திய 16 பேர் இரானில் பலி

கொரோனா அச்சம்: எரிசாராயம் அருந்திய 16 பேர் இரானில் பலி

by bait
0 comments

மது அருந்தினால் கொரோனா குணமாகும் என நம்பி எரிசாராயத்தை குடித்த 16 இரானியர்கள் உயிரிழந்துள்ளது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இரானில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, அந்நாட்டில் அது குறித்த பல பொய்ச்செய்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக மதுபானங்கள் அருந்தினாலே, அல்லது வாய் கொப்பளித்தாலோ கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்ற வதந்தி இரானில் வைரலாக பரவி வருகிறது. வோட்கா அருந்துவதால்தான், ரஷ்யர்களை கொரோனா பெரிய அளவில் தாக்கவில்லை என்ற செய்தியும் அதில் இடம்பெற்றிருந்தது.இந்நிலையில் இரானின் குசெஸ்தான் மாகாணத்தில் இந்த வதந்திகளை நம்பி எரிசாராயம் மூலம் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை அருந்தியதால் குறைந்தபட்சம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.ஆர்.என்.ஏ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

மெத்தனால் கலந்திருந்த அந்த நச்சு மதுபானத்தை அருந்திய 331 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குறைந்தபட்சம் 16 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இரானில் மதுபானங்கள் குடிப்பது சட்டப்படி குற்றம். இருந்தாலும் சட்டவிரோதமாக அண்டை நாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் எரிசாராயத்தை பலர் அங்கு ரகசியமாக அருந்து வருகின்றனர். இந்த எரிசாராயம் விஷமாக மாறி கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கானோரின் உயிரைப் பறித்துள்ளது. மேலும் எரிசாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்படோர் பலர், அரசு தங்களை கைது செய்து விடும் என்பதற்காக மருத்துவமனைகளுக்கு செல்வதும் இல்லை.இந்நிலையில் இந்த போலி மதுபானத்தை தயாரித்ததாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இரான் சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.வளைகுடா நாடுகளில் இரானில்தான் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் கொரோனாவினால் 43 பேர் இரானில் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை மொத்தம் 7,161 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சம் 237 பேர் உயிரிழந்துள்ளனர்.

தகவல் : BBC

banner

You may also like

Leave a Comment