போதைப்பொருட்கள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கைதான நம்ரதா போதைப்பொருட்களுக்கு பல ஆண்டுகளாக அடிமையானது தெரியவந்தது

தெலங்கானாவில் கொகைன் போதைப்பொருள் வாங்குவதற்காக பெண் மருத்துவர் செய்த அதிர்ச்சி செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளது.
சமீப காலமாக போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களிடம் அதிகரத்து வருகிறது. போதைப்பொருட்களுக்கு அடிமையான இளைஞர்கள் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதே மறந்து பல குற்றசெயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். போதைப்பொருட்கள் வாங்குவதற்காக பெற்றோர்களிடம் காசு கேட்டு தகராறு செய்வது, கொலை மற்றும கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் பல அரங்கேறி வருகின்றனர். இந்நிலையில் பெண் மருத்துவர் ஒருவர் கொகைன் போதை பொருள் பயன்படுத்தி அதற்கு அடிமையாகி உள்ளார். மேலும் இதை வாங்க அவர் தனது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை விற்றுள்ள கொடுமை அம்பலமாகி உள்ளது.
தெலங்கானாவைச் சேர்ந்தவரான 34 வயதான பெண் மருத்துவர் நம்ரதா சகுருபதி. இவர் ஒரு மருத்துவமனையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாவார். நம்ரதாவிடம் போதைப்பொருட்கள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து 53 கிராம் கொகைன் போதைப்பொள் பறிமுதல் செய்யப்பட்டதுடன்,அவர் கைது செய்யப்பட்டார்.
தகவல் : NEWS18TAMIL
