Home Uncategorizedகுடியாத்தத்தில் மது பாட்டில்கள் விற்றவர்கள் கைது

குடியாத்தத்தில் மது பாட்டில்கள் விற்றவர்கள் கைது

by bait
0 comments

குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜி, செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் காந்திநகர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்தப்பகுதியில் மது பாட்டில்கள் விற்றுக்கொண்டிருந்த திருமலை (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதேப்போல் சேங்குன்றம் புதுமனை பகுதியில் மது பாட்டில்கள் விற்ற வேண்டா (60) என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேப்போன்று எர்த்தாங்கல் பகுதியில் முருகேசன் என்பவரது பெட்டிகடையில் நடத்திய சோதனையில் அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 34 புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், முருகேசன் (58) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல் : GETLOKALAPP

You may also like

Leave a Comment