Home Uncategorized காரில் `கஞ்சா’ வைத்திருந்த வழக்கு: சவுக்கு சங்கருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

 காரில் `கஞ்சா’ வைத்திருந்த வழக்கு: சவுக்கு சங்கருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

by bait
0 comments

காரில் `கஞ்சா’ வைத்திருந்த வழக்கில் கைதான அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Savukku Shankar | Madurai: பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறி கோவை சைபர் கிரைம் போலீசில், சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கடந்த 4 ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். 

இதனிடையே, தேனியில் கைது  சவுக்கு சங்கர் செய்யப்பட்ட போது, அவர் 3 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. சவுக்கு சங்கருக்கு கஞ்சா வழங்கியதாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் விசாரணைக்கு ஆஜரானார்.

banner

இந்த நிலையில், காரில் `கஞ்சா’ வைத்திருந்த வழக்கில் கைதான சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தகவல் : INDIANEXPRESS

You may also like

Leave a Comment