Home Uncategorizedகள்ளச்சாராயம் குடித்து இருவர் பலி! பிரேதங்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய ஆட்சியர் உத்தரவு

கள்ளச்சாராயம் குடித்து இருவர் பலி! பிரேதங்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய ஆட்சியர் உத்தரவு

by bait
0 comments

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் இருவரின் உடல்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 150 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் வயிற்றுப்போக்கு, கண் பார்வை குறைவு, காது கேளாமையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
kallakurichi illicit liquor 
 எனினும் கள்ளச்சாராயத்தின் வீரியம் அதிகரித்துள்ளதால் பலர் உயிரிழந்து வருகிறார்கள். இதுவரை 54 பேர் இறந்துள்ளனர். இன்னும் பலர் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது.

ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்களுக்கு சாராய பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டது. அதை குடித்துவிட்டு வயிற்றுப்போக்கு, ரத்த வாந்தி, கண் பார்வை மங்குதல், காது கேளாமை உள்ளிட்டவை ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களுக்கு தலா ரூ 10 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அது போல் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ரூ 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


கருணாபுரத்தில் ஒரு தெருவில் மட்டும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியே சுடுகாடு போல் காட்சியளிக்கிறது. இந்த நிலையில்தான் கள்ளச்சாராயம் குடித்து இருவர் உயிரிழந்ததாகவும் அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

banner

மாதவச்சேரியை சேர்ந்த இளையராஜா திருாநாவுக்கரசு ஆகியோர் கள்ளச்சாராயம் குடித்ததாக தெரிகிறது. அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டனர். இதையடுத்து இவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல் உறவினர்கள் இறுதி சடங்குகளை செய்துவிட்டனர். இதில் இளையராஜாவின் உடல் புதைக்கப்பட்டது. திருநாவுக்கரசரின் உடல் எரியூட்டப்பட்டுவிட்டது. இதையடுத்து அரசு அறிவித்த நிவாரண நிதி ரூ 10 லட்சம் தங்களுக்கு கிடைக்கவில்லை என இரு குடும்பத்தினரும் ஆட்சியரிடம் முறையிட்டனர்

அப்போது விசாரணையில் அவர்கள் இருவரது இறப்பும் அரசு கணக்கில் வராததால் நிவாரணம் தரப்படவில்லை என தெரிகிறது. இதையடுத்து இளையராஜாவின் உடலை தோண்டி எடுத்து நாளை பிரேத பரிசோதனை செய்ய ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அது போல் எரியூட்டப்பட்ட திருநாவுக்கரசரின் எலும்புகளை எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

தகவல் : ONEINDIA

You may also like

Leave a Comment