கள்ளச்சாராயத்தில் கலக்கப்படும் மெத்தனால் மனிதர்களின் உயிரை பறிக்கும் அளவுக்கு விஷமாக மாறுவது எப்படி என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

கள்ளச்சாராயத்தில் கலக்கப்படும் மெத்தனால் உயிரை பறிக்கும் அளவுக்கு விஷமாக மாறுவது எப்படி என்பது குறித்து இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த சிலருக்கு வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் ஏற்பட்ட நிலையில் அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் தற்போது வரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 10 நோயாளிகளுக்கு மூச்சு சம்பத்தப்பட்ட சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 நோயாளிகளும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், அவர்கள் குடித்த கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டது தான் அவர்கள் உயிரை பறிக்க காரணம் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
தகவல் : NEWS18TAMIL
