Home Uncategorizedகள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து உயிரிழப்பு: 59 ஆக உயர்வு: 112 மேற்பட்டோர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து உயிரிழப்பு: 59 ஆக உயர்வு: 112 மேற்பட்டோர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை

by bait
0 comments

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவங்கூரை சேர்ந்த 34 வயது இளைஞர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். நள்ளிரவில் இவர் உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கள்ளச்சாரயம் குடித்த  112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 10 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாண்டிச்சேயில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் உற்பட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.விஷச்சாராய விவகாரத்தில் இதுவரை 12 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.

தகவல் : INDIANEXPRESS

banner

You may also like

Leave a Comment