கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து சுரேஷ், பிரவீன், சேகர் உள்ளிட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததாக கூறப்படும் விவகாரத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து சுரேஷ், பிரவீன், சேகர் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ள நிலையில் சேலம், விழுப்புரம், திருவண்ணாமலையில் இருந்து 15 மருத்துவர்கள் மற்றும் 40 செவிலியர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
அதேபோல் மேல் சிகிச்சைக்காக 3 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், 4 பேரின் இறப்பிற்கான உண்மையான காரணம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருவதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 200 லிட்டர் பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து நேரில் விசாரிக்க அமைச்சர் மா.சுப்ரமணியன் அங்கு சென்றுள்ளார்.
தகவல் : NEWS18TAMIL
