Home Uncategorizedகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 35 ஆக அதிகரிப்பு: 70-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 35 ஆக அதிகரிப்பு: 70-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை

by bait
0 comments

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கண்ணுக்குட்டி என்ற பட்டப்பெயர் கொண்ட நபர் ஒருவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இதனை வாங்கி குடித்த சிலருக்கு வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் ஏற்பட்ட நிலையில் அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் தற்போது வரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திகுறிப்பில், பாதிக்கப்பட்டவர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்திருக்கக்கூடும் என சந்தேதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

தகவல் : NEWS18TAMIL

banner

You may also like

Leave a Comment