Home Uncategorizedகருவேப்பிலங்குறிச்சி: கஞ்சா விற்ற 3 பேர் கைது

கருவேப்பிலங்குறிச்சி: கஞ்சா விற்ற 3 பேர் கைது

by bait
0 comments

கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் பாசிக்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, முந்திரி காட்டில் சந்தேகத்திற்கிடமாக நின்ற 5 பேரில் 3 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. செல்வகுமார் (26), ராஜ்குமார் (22), கேப்டன் (19) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய சுபேந்தர், வீரா ஆகியோரை தேடி வருகின்றனர்.

தகவல் : GETLOKALAPP

You may also like

Leave a Comment