உழைத்த களைப்பை போக்க தினமும் கள்ளச்சாராயத்தை குடிக்கும் பழக்கத்தை சுரேஷ் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அது போல், கடந்த 18 ஆம் தேதியும் பணி முடித்து வந்த சுரேஷ், சாராயத்தை குடித்துள்ளார்.

கள்ளச்சாராயம் குடித்த கணவரும், ஓம வாட்டர் என்று எண்ணி கள்ளச்சாராயத்தை குடித்த மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவர்களின் மகளும், 2 மகன்களும் நிர்கதியாய் தவிக்கும் காட்சி காண்போரை கலங்க வைத்துள்ளது.
கள்ளக்குறிச்சியின் கருணாபுரம் கள்ளச்சாராய சோகத்தில் பெரும் சோகமாக தாய் தந்தை இருவரையும் இழந்துள்ளார்கள் 3 குழந்தைகள். மேட்டு தெருவை சேர்ந்த சுரேஷ்-வடிவு தம்பதிக்கு 11 ஆம் வகுப்பு படிக்கும் மகளும், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் 2 மகன்களும் உள்ளனர். வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், கை ஒன்றை இழந்த போதிலும், பெயிண்டிங் பணியாற்றி 37 வயதான சுரேஷ் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். 34 வயதான வடிவு கட்டிட கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
உழைத்த களைப்பை போக்க தினமும் கள்ளச்சாராயத்தை குடிக்கும் பழக்கத்தை சுரேஷ் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அது போல், கடந்த 18 ஆம் தேதியும் பணி முடித்து வந்த சுரேஷ், சாராயத்தை வீட்டுக்கு வாங்கி வந்து டம்ப்ளரில் ஊற்றி குடித்துவிட்டு, மீதியை அப்படிவே வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வடிவு, டம்பளரில் உள்ளது கள்ளச்சாராயம் என்பதை அறியாமல் ஓம வாட்டர் என்று எண்ணி குடித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தகவல் : NEWS18TAMIL
