பெங்களூரு அருகே மைலசந்திராவில் பெண்ணை இளைஞர்கள் கும்பல் கஞ்சா போதையில் தாக்கிய சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெங்களூரு அருகே பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் இளைஞர்கள் சிலர் அடித்து உதைத்த அதிர்ச்சி தரும் காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மைலசந்திரா என்ற இடத்தில் மாலை மளிகைப்பொருட்கள் வாங்கச் சென்ற பெண்ணை இளைஞர்கள் கும்பல் தடுத்து நிறுத்தி தொட்டு பேச முயன்றதாக கூறப்படுகிறது. அந்த இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற அந்த பெண்ணை அந்த இளைஞர்கள் கடுமையாக தாக்கியது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவானது.
இதையடுத்து பாதிப்புக்குள்ளான அந்த பெண் உடனே செல்போன் மூலம் தனது நண்பருக்கு அந்த பெண் தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு வந்த நண்பர், அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்களை தாக்கி அப்பகுதி மக்கள் உதவியுடன், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டார். இது குறித்து இருதரப்பிலும் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் விசாரணை நடந்து வருகிறது.
தகவல் : NEWS18TAMIL
