Home Uncategorizedகடலூருக்கு கஞ்சா சப்ளை செய்த 4 பேர்… ஆந்திரா சென்று கைது செய்த போலீஸ்… 21 கிலோ கஞ்சா பறிமுதல்

கடலூருக்கு கஞ்சா சப்ளை செய்த 4 பேர்… ஆந்திரா சென்று கைது செய்த போலீஸ்… 21 கிலோ கஞ்சா பறிமுதல்

by bait
0 comments

ஆந்திராவை சேர்ந்த 4 பேர் கடலூர் மாவட்டத்திற்கு 21 கிலோ கஞ்சா சப்ளை செய்ததாக விஜயவாடாவில் கடலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆந்திராவை சேர்ந்த 4 பேர் கடலூர் மாவட்டத்திற்கு 21 கிலோ கஞ்சா சப்ளை செய்ததாக விஜயவாடாவில் கடலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆந்திராவை சேர்ந்த 4 பேர் கடலூர் மாவட்டத்திற்கு 21 கிலோ கஞ்சா சப்ளை  செய்ததாக விஜயவாடாவில் கடலூர்  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் இன்று (26.05.2025) மாலை  கூறியதாவது:

கடலூர் முதுநகர் காவல் நிலைய பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் கடந்த 21.05.2025 ஆகாஷ் வயது 23, கவியரசன் வயது 23,  வசந்த் (எ) அய்யப்பன் வயது 24, பரத்குமார் வயது 23, ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

banner

இந்த வழக்கில் கைதான  வசந்த் (எ) அய்யப்பன் என்பவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கஞ்சா மொத்தமாக விற்பனை செய்யும் எதிரிகள் சாய்கணேஷ் ஹனுமான் ஜங்ஷன் ராஜம் கிராமம், ஆந்திர மாநிலம், கடலூர் பிள்ளையார்மேட்டை சேர்ந்த அவினாஷ் அரவிந்த் ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தலைமறைவு குற்றவாளிகள் ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில் இருப்பதாக தகவல் கிடைத்தவுடன் கஞ்சா குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க ரூபன்குமார், ராஜா ஆகியோர்களின் மேற்பார்வையில் கடலூர் முதுநகர் காவல் ஆய்வாளர்  கதிரவன் வழிகாட்டுதலின்பேரில் உதவி ஆய்வாளர்  ஆனந்தகுமார்  தவச்செல்வன் மற்றும் கடலூர் உட்கோட்டம் குற்றபிரிவு போலீசார் ஆந்திரமாநிலம் அனகாபுத்தூர் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் தலைமறைவான குற்றவாளிகள் விஜயவாடா ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருப்பதாக தகவல் தெரிந்து தனிப்படையினர் ரகசிய தகவலாளி உடன் விஜயவாடா ரயில்வே ஸ்டேஷன் சென்று தகவலாளி அடையாளம் காட்ட ரயில்வே ஸ்டேஷன் அருகில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை போலீசார் சுற்றி வளைத்ததில் 3 குற்றவாளிகள் பிடிப்பட்டனர், 3 நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 21 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்துள்ளதை கைப்பற்றினர்.

பின்னர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் சாய்கணேஷ் (எ) சக்கரவர்த்தி வயது 20, த/பெ கோவிந்தா, ஹனுமான் ஜங்ஷன், ராஜம் கிராமம், புச்சையபோட்டா தாலுக்கா, அனகாபள்ளி மாவட்டம ஆகாஷ் (எ) அவினாஷ் வயது 21, சின்னபிள்ளையார்மேடு ரோஸி (எ) அரவிந்த் வயது 19, ஆகியோர்களை 25.5.2025 தேதி கைது செய்தனர். பின்னர், காவல் வாகனம் முலம் கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கடலூர் மாவட்டத்தை சார்ந்த 3 கஞ்சா குற்றவாளிகள் ஆந்திர மாநிலம் சென்று கஞ்சா வாங்க சென்றவர்கள் தப்பி ஒடிவிட்டதாக விசாரணையில் தெரிய வருகிறது. தப்பி ஒடிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். கஞ்சா தலைமறைவு குற்றவாளிகளை ஆந்திர மாநிலம் சென்று கைது செய்து 21 கிலோ கஞ்சா பிடித்த காவல் கைது செய்தனர்” என்று கூறினார்.

தகவல் : INDIANEXPRESS

You may also like

Leave a Comment