சென்னை போரூரில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட விரோதம் காரணமாக பப்ஜி ஆடிக்கொண்டிருக்கும் போது இளைஞரை சரமாரியாக ஒரு கும்பல் வெட்டியுள்ளது.

சென்னை போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் தெள்ளியார் அகரம் பகுதியைச் சேர்ந்த தமிழ் என்ற இளைஞர் மீது கஞ்சா விற்பது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போரூர் போலீஸ் நிலையத்தில் உள்ளது. நேற்று இரவு தனது நண்பர்களுடன் தெள்ளியார் அகரம் பகுதியில் அமர்ந்து பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஐந்து வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்டோர் தமிழை தனியாக அழைத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வெறி அடங்காத மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், வழியில் நடந்து சென்று கொண்டிருந்த சூர்யா என்ற வட மாநில இளைஞரையும் ஆத்திரத்திம் வெட்டினர்.
பின்னர் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார்களை தங்களது கத்தியால் அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து படுகாயம் அடைந்த தமிழை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்த நிலையில், அங்கு தீவிர சிகிச்சையில் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் : INDIANEXPRESS
