Home Uncategorizedகஞ்சா போதையில் தண்டவாளத்தில் தள்ளாடிய மாணவர்கள்… அரக்கோணத்தில் அதிர்ச்சி!

கஞ்சா போதையில் தண்டவாளத்தில் தள்ளாடிய மாணவர்கள்… அரக்கோணத்தில் அதிர்ச்சி!

by bait
0 comments

ஒரு மாணவர் மற்றொருவரை தூக்கிவிட முயற்சித்த போது, அவர் எழுந்திருக்கக் கூட முடியாத அளவுக்கு போதையில் விழுந்து கிடந்தார்.

அரக்கோணம் ரயில் நிலையத்தில், ஐடிஐ மாணவர்கள் இருவர் கஞ்சா போதையில் தள்ளாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த சூழலில், அரக்கோணம் ரயில் நிலையத்தில் இரண்டு மாணவர்கள் நடக்க முடியாத அளவுக்கு தள்ளாடியபடி வந்தனர். அரசு ஐடிஐ கல்லூரி சீருடையில் இருந்த மாணவர்கள் இருவரும், 5-வது நடைமேடை அருகே தண்டவாளத்தில் இறங்கினர்.

தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற அவர்கள், கஞ்சா போதையில் நிலைகுலைந்து அங்கேயே விழுந்து புரண்டனர். ஒரு மாணவர் மற்றொருவரை தூக்கிவிட முயற்சித்த போதும், அவர் எழுந்திருக்கக் கூட முடியாத அளவுக்கு போதையில் விழுந்து கிடந்தார். பின்னர், அங்கிருந்து சற்று நகர்ந்து சென்ற மாணவர்கள் மற்றொரு தண்டவாளத்தில் நின்றிருந்த ரயில் பெட்டிகளுக்கு இடையே விழுந்து கிடந்தனர்.

banner

தகவல் : NEWS18TAMIL

You may also like

Leave a Comment