திருவள்ளூரில் பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடந்த முதற்கட்ட விசாரணையில், சூலூர்பேட்டையில் ஓட்டலில் வேலை பார்த்து வரும் நபர், கஞ்சா போதைக்கு அடிமையானவர் ஆவார். சமீபகாலமாக வேலைக்கு கூட செல்லாமல் தமிழக எல்லையோர கிராமங்களுக்கு வந்து சென்றுள்ளார். அப்போதுதான் கயவனால் சிறுமிக்கும் துயரம் நடந்துள்ளது.