”சைலேந்திரபாபு டிஜிபியாக இருந்தபோது, கஞ்சாவை ஒழிப்பதற்கு 2.0, 3.0, 4.0 என்று ஓ போட்டுக்கொண்டு ஓய்வு பெற்றுவிட்டார்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

கும்மிடிப்பூண்டி தொகுதியில் ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கஞ்சா இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்த கருத்துக்கு பதில் கொடுத்து விமர்சித்தார்.
கும்மிடிப்பூண்டி பிரச்சாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது; “தமிழ்நாட்டில் கஞ்சா இல்லை என மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் இன்று சொல்லியுள்ளார். நேற்றுதான், திருத்தணியில் வடமாநில இளைஞரை நான்கு போதை ஆசாமிகள் தாக்கிய செய்தி வந்தது. காவல்துறை மானிய கோரிக்கையில் பள்ளி கல்லூரிக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்யும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 148 பேர் கைது செய்யப்பட்டனர்.
தகவல் : NEWS18TAMIL
