இந்த வருடத்தில் 7 மாதங்களில் 700க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவாகியிருக்கிறது. அப்படியென்றால், எத்தனை ஆயிரம் இளைஞர்களும், மாணவர்களும் கஞ்சாவிற்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

தலைநகர் சென்னையில் இளைஞர்கள் அதிகளவில் கஞ்சாவுக்கு அடிமையாகின்றனர். இதனால், இளைஞர்கள் ஆண்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டு, அவர்களது எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாக நிற்கிறது என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
2025 ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் இறுதி வரையிலான ஏழு மாதங்களில் மட்டும், சுமார் 700-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவாகி தலைநகர் சென்னையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
சமீபத்தில் சென்னை புளியந்தோப்பில், மாணவர்களிடம் செல்போன் பறித்த இரண்டு நபர்களைக் கைதுசெய்தபோது, கஞ்சா போதையிலிருந்த அவர்கள், திடீரென போலீஸார்மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்திய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் காவல்துறையில் பணியாற்றும் பாரதி என்பவரின் கணவர் இளவரசன், கஞ்சா போதையில் தன் மனைவியை அரிவாளால் தாக்கிய சம்பவம்… சென்னை திருப்போரூரில் இருந்து பாரிமுனைக்குச் செல்லும் அரசுப் பேருந்து நடத்துனர் மோதியை, கஞ்சா போதை இளைஞர்கள் சரமாரியாகத் தாக்கிய சம்பவம், சென்னை மருத்துவக் கல்லூரி விடுதியில் பயிற்சி மருத்துவர்கள் மூன்று பேர் கஞ்சா போதையில் செய்த கலாட்டா என… சென்னையில் கஞ்சா போதையில் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
தகவல் : ASIANET
