மதுவிலக்கு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடத்தும் மாநாட்டில் அ.தி.மு.கவினரும் பங்கேற்கலாம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்திருந்தார். அதே சமயம் அவர் அ.தி.மு.கவிற்கு அழைப்பு விடுத்திருந்தது, திருமாவளவன் தி.மு.கவில் இருந்து பிரிந்து அ.தி.மு.கவோடு கூட்டணி வைக்கப்போகிறார் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பேசுபொருளானது. இதற்குக் கூட்டணியைச் சார்ந்தவர்கள், கூட்டணியைச் சாராதவர்கள் எனப் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
இந்த விவகாரம் அடங்குவதற்குள், ‘ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என வேண்டும்’ என்று ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியது. அதோடு அந்த வீடியோ உடனடியாக டெலிட் செய்யப்பட்டிருந்ததது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அந்த வகையில் 2 முறை வீடியோவை பதிவிட்டு நீக்கிய நிலையில், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு எனும் வீடியோவை 3வது முறையாக மீண்டும் திருமாவளவனின் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு பேசுபொருளானது.

தகவல் : NAKKHEERAN