Home Uncategorizedஊட்டி அருகே குன்னூரில் பரிகார பூஜையில் சாமியார் செய்த பைத்தியக்காரத்தனம்.. விவசாயி மறக்கவே மாட்டார்

ஊட்டி அருகே குன்னூரில் பரிகார பூஜையில் சாமியார் செய்த பைத்தியக்காரத்தனம்.. விவசாயி மறக்கவே மாட்டார்

by bait
0 comments

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் குறி சொல்லும் சாமியாராக இருக்கிறார். அதே பகுதியில் உள்ள நாகராஜ் விவசாயம் செய்து வருகிறார். குறி சொல்லும் சிவக்குமாரை பலர் தேடி வந்து குறி கேட்பார்கள்.. அப்படி குறி கேட்க வருபவர்களிடம் மது அருந்திவிட்டு கண்டபடி பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் நகராஜை வைத்து பரிகார பூஜை செய்துள்ளார். அப்போது தான் அவரது பைத்தியக்காரத்தனத்தை பார்த்து ஊர் மக்கள் ஆடிப்போனார்கள்.. இன்னும் மூடநம்பிக்கைகளை பலர் நம்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள். சிலர் சாமியார் என்று சொல்லிக் கொண்டு, குடித்துவிட்டு வாயில் வந்ததை பேசுவார்கள். அவர்களிடம் குறி கேட்க வேண்டும் என்றால் போகும் போதே குவாட்டர் பாட்டிலை வாங்கி கொண்டு போக வேண்டும்.அவர்கள் குவாட்டர் பாட்டிலை ராவாக அடித்துவிட்டு, திடீரென சாமியார் அவதாரம் எடுப்பார்கள்.

What did the priest do to the farmer who was performing atonement puja in Coonoor Nilgiris district

எப்படி நடக்கும் அவர்கள் மனதில் தோன்றியதை கூறிவிட்டு, பின்னர் பணத்தையும் வசூலிப்பார்கள். சாமியின் பெயரை சொல்லி சரக்கும், பணமும் வாங்கி கொண்டு ஏமாற்றிவிட்டு, இறுதியாக கொஞ்சம் விபூதியை கொடுத்துவிட்டு, கூடவே ஒரு எழுமிச்சை பழத்தை கொடுத்து அனுப்பிவிடுவார்கள்.. இது பரவலாக நடக்கிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் விவசாயி ஒருவருக்கு பைத்தியம் பிடித்திருப்பதாக கூறி பரிகார பூஜை நடத்திய சாமியார் ஒருவர், மதுபோதையில் பைத்தியக்காரத்தனமான செயலை செய்ததாக கூறப்படுகிறது. அது பற்றி பார்ப்போம்.

சிவகுமார் மதுபானம் குடித்தார் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கொம்பை தூதூர்மட்டம் மகாலிங்க காலனி பகுதியை சேர்ந்த 40 வயதாகும் நாகராஜ் என்ற விவசாயி, அதே பகுதியை சேர்ந்த 54 வயதாகும் சிவக்குமார் , இவர் குறி சொல்லும் சாமியாராக உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிவக்குமார் தனக்கு மதுபானம் வாங்கி வருமாறு நாகராஜிடம் பணம் கொடுத்திருக்கிறார். அவரும் மது வாங்கி கொடுத்துள்ளார். சாமியார் சிவக்குமார் அந்த மதுபானத்தை குடித்தார்.

விவசாயிக்கு பரிகார பூஜை பின்னர் நாகராஜுக்கு மனநிலை சரியில்லை என அக்கம்பக்கத்தில் பேசுவதாக கூறி, அதற்கு பரிகார பூஜை செய்கிறேன் என சிவக்குமார் கூறியிருக்கிறார். பின்னர் அவரை வீட்டில் அமர வைத்து சிவக்குமார் குடிபோதையில் பூஜை செய்து உள்ளார். அவர் மீது திருநீர், குங்குமத்தை வீசி இருக்கிறார். ஒரு கட்டத்தில் கத்தியை எடுத்து நாகராஜின் தலை, நெற்றியில் என சரமாரியாக குத்தியிருக்கிறார். இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறியடித்து வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தார். மருத்துவமனையில் அனுமதி இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் விவசாயி நாகராஜை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த கொலக்கம்பை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்து வருகிறார்கள்.

சாமியார் சிவக்குமார் கைது சாமியார் சிவக்குமார் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குறி சொல்லி வருவதும், பெரும்பாலான நேரங்களில் மதுபோதையில் இருப்பாராம். சிவராத்திரி, அமாவாசை உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜை என்ற பெயரில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அவரது வீட்டிற்கு வந்து வழிபாடு செய்வார்களாம். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

தகவல் : ONEINDIA

banner

You may also like

Leave a Comment