Home Uncategorizedஉங்க ஏரியாவில் கஞ்சா, கள்ளச் சாராயம் இருக்கிறதா? புகார் தெரிவிக்க மொபைல் எண்களை அறிவித்த சென்னை போலீஸ்

உங்க ஏரியாவில் கஞ்சா, கள்ளச் சாராயம் இருக்கிறதா? புகார் தெரிவிக்க மொபைல் எண்களை அறிவித்த சென்னை போலீஸ்

by bait
0 comments

சட்டவிரோத மதுபானம், கஞ்சா விற்பனை குறித்த தகவல்களை மதுவிலக்கு ஆயத்தீர்வு துறையின் மொபைல் எண்கள் மூலம் பெருநகர சென்னை காவல்துறைக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

போதைப்பொருட்களுக்கு எதிரான இயக்கம் (டிஏடி) மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை தயாரிப்புகளுக்கு எதிரான இயக்கம் (டிஏபிடிஓபி) ஆகியவற்றின் கீழ் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கைது நடவடிக்கை மேற்கொண்டு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

மேலும் இதன் தொடர்ச்சியாக, போதைப் பொருள் கடத்தல் மற்றும் கள்ளச் சாராயம் விற்பனை குறித்த தகவல்களை மக்கள் தெரிவிக்கும் வகையில் சென்னை காவல்துறை மொபைல் எண்களை அறிவித்துள்ளது.

கடத்தல், பதுக்கல், விற்பனை ஆகியவற்றை தடுக்க நகரில் ரோந்து மற்றும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

banner

8072864204, 9042380581, 9042475097 மற்றும் 6382318480 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை காவலரிடம் சட்டவிரோத போதைப் பொருள், மதுபான விற்பனை குறித்து புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் : INDIANEXPRESS

You may also like

Leave a Comment