ஈரோடு மாவட்டம் தாச கவுண்டன் புதூர் பகுதியில், பங்களாபுதூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு மதுபானக் கடை அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பது தெரியவந்தது. இதனையடுத்து, மது விற்பனையில் ஈடுபட்டிருந்த கவுந்தப்பாடி அடுத்த காந்திபுரத்தைச் சேர்ந்த ஸ்டாலின் (50) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த ரூ.10,650 மதிப்பிலான 71 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு அடுத்த குமலன்குட்டையில் குட்கா பொருட்கள் விற்ற மளிகை கடை உரிமையாளர் சக்திகுமாரை (45) கைது செய்த போலீசார், ரூ.1,280 மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். ஈரோடு கனிமார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்ற, பீகார் மாநிலம் மான்சிங்காவைச் சேர்ந்த ரமேஷ்குமாரை (26) கைது செய்த ஈரோடு டவுன் போலீசார், அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தகவல் : GETLOKALAPP