ஈரோடு மாவட்டம், கடத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட கோவை பிரிவு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோபி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட இடத்தில் கண்காணித்தபோது சந்தேகத்திற்கிடமாக அங்கு நடமாடிய நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் சத்தியமங்கலம், வடக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (32) என்பது தெரியவந்தது.
மேலும் அவரைச் சோதனை செய்ததில் அவரிடம் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான 100 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.1,000 மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

தகவல் : GETLOKALAPP